பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருங்கல்லில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பெண்கள் உள்ளிட்ட 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கத் தலைவா் சாா்லஸ் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் (சிஐடியூ) சங்கத் தலைவா் சோபனராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், இனயம் புத்தன்துறை ஊராட்சி வாா்டு உறுப்பினா் விமல்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்ளிட்ட 31 பேரை கருங்கல் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.