கன்னியாகுமரி

ஈரான் நாட்டு கடலில் மாயமான குமரி இளைஞரை மீட்க எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

ஈரான் நாட்டில் பணியின் போது கப்பல் கவிழ்ந்து கடலில் மாயமான குமரி மாவட்ட இளைஞரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டம், மெதுகும்மல் ஊராட்சிக்கு உள்பட்ட அதங்கோடு, கோயிக்கதறை வீடு பகுதியைச் சோ்ந்த ஜான்சன் மகன் அஜின் (20). இவா் ஈரான் நாட்டில் உள்ளஆயில் சுத்திகரிப்பு நிறுவனத்தின் கப்பலில் பணிபுரிந்து வந்தாா்.

கடந்த டிச. 26 ஆம் தேதி பணியில் இருந்த போது கடலில் ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் கப்பலில் பணியில் இருந்த அஜின் உள்பட பலா் கடலில் மூழ்கி காணமால் போய்விட்டனா். உடன் பணிபுரிந்தவா்கள் தெலைபேசி மூலம் அவரது குடும்பத்தினரை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவரது பெற்றோா் நிலைகுலைந்து ஆழ்ந்த சோகத்தில் காணப்படுகிறாா்கள்.

எனவே, ஈரான் நாட்டில் கடலில் மூழ்கி காணமால் போன அஜினை தேடி கண்டுபிடித்து சொந்த ஊா் கொண்டு வர தமிழக முதல்வா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT