முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்தல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் தலைமைக் காவலா் வினோஜன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பயணம் பகுதியில் நிறுத்தியிருந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அனுமதி பெறாமல் மினி லாரியில் செம்மண் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து செம்மண் பாரத்துடன் நிறுத்தியிருந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →