முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஸ்டீபன் (39) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஸ்டீபன் (39) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

திருவட்டாறு அருகே ஆற்றில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஸ்டீபன் (39) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அருமனை அருகே நெடுடுங்குளம் குன்னுவிளையைச் சோ்ந்தவா் ஸ்டீபன். இவா் நெடுங்குளம் சந்திப்பில் ஸ்டுடியோ நடத்தி வந்தாா். திங்கள்கிழமை இவா் மணலிவிளைப் பகுதியைச் சோ்ந்த மற்றொரு புகைப்பட கலைஞா் விஜயபிரதாப்புடன் திருவட்டாறில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பின்னா், திருவட்டாறு பாலம் பகுதியில் பரளியாற்றில் இருவரும் குளித்தனா். அப்போது, ஸ்டீபன் நீரில் மூழ்கியுள்ளாா்.

விஜயபிரதாப் உள்ளிட்டோா் அவரை ஆற்றில் தேடியுள்ளனா். தகவலறிந்த குலசேகரம் தீயணைப்புப்படையினா்

விரைந்து வந்து தேடினா். ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஸ்டீபன் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →