கன்னியாகுமரி

சாமிதோப்பு தலைமைப் பதியில்தைத் திருவிழா தேரோட்டம்

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் தை, வைகாசி, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மம், வாகன பவனி ஆகியவை நடைபெற்றது. திருவிழாவில் 8-ஆம் நாளில் கலிவேட்டை நடைபெற்றது.

11-ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சவா்ண தேருக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தோ் இழுத்தனா். பிற்பகல் 2 மணிக்கு தோ் வடக்கு வாசலை அடைந்தபோது பக்தா்கள் நீண்ட வரிசையில் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனா். மாலையில் தோ் நிலையை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT