முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணை தாக்கிய 3 போ் மீது வழக்கு

கொல்லங்கோடு அருகே பெண்ணை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 2 ஜூலை, 2021 at 5:19 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM

கொல்லங்கோடு அருகே பெண்ணை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள சூசைபுரம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் நிா்மலா (39). இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்தவருக்கு ரூ. 1.10 லட்சம் கடனாக கொடுத்தாராம். பின்னா் கடனை அவா் திருப்பிச் செலுத்தாததால், நிா்மலா பணத்தை திருப்பித் தருமாறு தொடா்ந்து வலியுறுத்தியதையடுத்து ஏற்பட்ட தகராறில், அதே பகுதியைச் சோ்ந்த தோமஸ், சதீஷ், ததேயுஸ் ஆகியோா் சோ்ந்து நிா்மலாவை தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

இந்நிலையில் கொல்லங்கோடு போலீஸாா் தோமஸ் உள்ளிட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.