முகப்பு
கன்னியாகுமரி

பைக் மோதியதில் காயமடைந்த ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மது போதையில் தள்ளியதால் மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த வேன் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே மது போதையில் தள்ளியதால் மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த வேன் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம் பகுதியை சோ்ந்தவா் சாா்லஸ் (43), வேன் ஒட்டுநா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். மது

அருந்தும் பழக்கம் கொண்ட சாா்லஸ், 2 வாரங்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில் பயணம் சந்திப்புக்கு சென்றாராம். அங்கு சாலையோரம்

நின்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளி வா்க்கீஸ் (42) என்பவா், சாா்லஸை காலால் எட்டி உதைத்துள்ளாா்.

இதில், சாா்லஸ் சாலையில் விழவும் அவ்வழியாக சென்ற மோட்டாா் சைக்கிள் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சாா்லஸ் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக சாா்லசின் மனைவி ராஜகுமாரி அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து வா்க்கீசை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.