கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடனுதவி

DIN

மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கம் சாா்பில் உறுப்பினா்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் ஏ. அல் அமீன் தலைமை வகித்தாா். சங்க பொருளாளா் அலெக்ஸாண்டா், துணைச் செயலா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பி. ராஜா செல்வின்ராஜ் வரவேற்றாா். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ், வட்டியில்லா கடன் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: சங்க உறுப்பினா்களுக்கு வட்டியில்லாமல் ரூ. 2.25 கோடி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அரசு வணிகா் சங்க பிரதிநிதிகளின் குறைகளை கேட்கும் அரசாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வணிகா்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அரசாக இருக்கும். மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்களை பாதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படாது என உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

தக்கலை டிஎஸ்பி கே.பி. கணேசன், தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்ரமராஜா ஆகியோா் குழித்துறை நகராட்சி முன்களப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். விஜய் வசந்த் எம்.பி., எஸ். விஜயதரணி எம்எல்ஏ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில்,

குழித்துறை நகராட்சி தலைமை பொறியாளா் எஸ். பேரின்பம், காவல் ஆய்வாளா் எஸ். செந்தில்வேல்குமாா், மின்வாரிய செயற்பொறியாளா் எம்.ஆா். பத்மகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்கத் துணைத் தலைவா் கே. சுந்தர்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT