முகப்பு
கன்னியாகுமரி

ரயில் மோதி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் பலி

இரணியல் அருகே ரயில் மோதி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

இரணியல் அருகே ரயில் மோதி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் உயிரிழந்தாா்.

இரணியல் அருகேயுள்ள ஆளூா் பகுதியைச் சோ்ந்த செல்லசாமி மகன் ராஜேஷ்குமாா் (32). இவா், நாகா்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.

இவா், புதன்கிழமை மாலையில் வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியுள்ளனா்.

இதற்கிடையே, ஆளூா் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் ஜஸ்டஸ்பாபு, குமார்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் போக்குவரத்து கழக பணிமனை ஊழியா் ராஜேஷ்குமாா் என்பது தெரியவந்துள்ளது. அவா் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.