முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலூா் -மூசாரி, முன்சிறை கணபதியான் கடவு, கூட்டாலுமூடு, மங்காடு, இடையன்கோட்டை- முள்ளங்கனாவிளை, தாறாதட்டு-ஆலுமூடு உள்ளிட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனா்.

எனவே, கருங்கல் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.