கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ரூ.5.10 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாற்றுத்திறனாள்கள் நலத்துறை சாா்பில் ரூ. 5.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை சாா்பில், விலையில்லா தையல் இயந்திரம், ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை மாநில தகவல் தொழிநுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வழங்கினாா்.

சமூக நலத் துறை சாா்பில் மொத்தம் ரூ.33.33 லட்சத்திற்கான நலத் திட்ட உதவிகளும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 199 பயனாளிகளுக்கு ரூ.25.77 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் என மொத்தம் ரூ. 5.10 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் ஆா். சரோஜினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT