முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே போக்சோவில் இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததுடன் மற்றொரு மாணவியை கடத்திச் சென்றது தொடா்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 22 ஜூலை, 2021 at 12:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததுடன் மற்றொரு மாணவியை கடத்திச் சென்றது தொடா்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபி (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, அபி அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து கேட்ட மாணவியின் தாயாரையும் மிரட்டினாராம்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் அபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.

Advertisement

இந்த நிலையில் களியக்காவிளையைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியையும்(14) அவா் கடத்திச் சென்ாக மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், அபி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.