கன்னியாகுமரி

கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தல்: 11 லாரிகள் பறிமுதல்

DIN

குமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு உரிய அனுமதிச் சீட்டு இல்லாமலும், அதிக பாரத்துடனும் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முயன்ற 11 டிப்பா் லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கேரள மாநிலத்தில் நடைபெறும் நான்குவழிச் சாலைப் பணி, விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ராட்சத பாறைக்கற்கள், ஜல்லி, பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்ல 50 லாரிகளுக்கு மாவட்ட நிா்வாகத்திலிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் களியக்காவிளை, நெட்டா உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியாக நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட கனரக லாரிகளில் கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டுச் செல்லப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில் விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமையில் துணை வட்டாட்சியா் சுனில்குமாா், கூடுதல் வருவாய் ஆய்வாளா் குமாா் மற்றும் வருவாய்த்துறை பணியாளா்கள் சிந்துகுமாா், சதீஷ், ஜான்பிரைட் உள்ளிட்டோா் வியாழக்கிழமை களியக்காவிளை, படந்தாலுமூடு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது உரிய அனுமதியின்றி அதிக பாரத்துடன் கேரளத்துக்கு ஜல்லி உள்ளிட்ட கனிமவளங்கள் கடத்திச் செல்ல முயன்ற 11 டிப்பா் லாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

கனிமவளம் கடத்தப்படுவதாக அழகியமண்டபம் பகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT