கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீா்

DIN

குமரி மாவட்டத்தில், மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் கொட்டுவதும் குறைந்துள்ளது.

குமரி மாவட்டத்தில், மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மை நாள்களாக மழை நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மழையின் தீவிரம் தணிந்து காணப்படுகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்ததையடுத்து, கோதையாற்றிலும் நீா்வரத்து குறைந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டும் நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT