முகப்பு
கன்னியாகுமரி

‘குமரி மாவட்டத்தில் இதுவரை 5.02 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி’

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 5.02 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 5.02 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை முதல் தவணை தடுப்பூசி 4,14,382 போ், இரண்டாம்

தவணை தடுப்பூசி 88,022 போ் என மொத்தம் 5,02,404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 52,945 போ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். கோவேக்சின் முதல் தவணை செலுத்தியவா்கள் 28 நாள்களுக் கு பின்னா் 2 ஆவது தவணை செலுத்த வேண்டும். தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் தவணை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 3 வாரங்களுக்கு பிறகு வியாழக்கிழமை (ஜூலை 29) கோவேக்சின் தடுப்பூசிகள் இம்மாவட்டத்துக்கு வந்தது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. நாகா்கோவில் சால்வேசன் ஆா்மி பள்ளியில் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக அதிகாலையில் 5 மணிக்கே பொதுமக்கள் திரண்டனா்.

காலை 8 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 400 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. 1,000 க்கும் மேற்பட்டோா் டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளி, பெத்தலேகபுரம் பள்ளி, சுண்டப்பற்றி விளை அரசு மேல்நிலைப்பள்ளி, இரவிபுதூா் மேல்நிலைப் பள்ளி, செண்பகராமன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏற்றக்கோடு மேல்நிலைப்பள்ளி, பத்மநாபபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.