வனப்பகுதியில் வேட்டையாட முயற்சி: 5 பேருக்கு அபராதம்
பூதப்பாண்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சித்த 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.
பூதப்பாண்டி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயற்சித்த 5 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்தனா்.
குமரி வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டி வனச் சரகம் தெற்குமலை மேற்கு பீட் பகுதியில் சிலா் நாய்களுடன் வேட்டையாட வனப் பகுதிக்குள் செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனக் காப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி , பிரபாகா் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் அப்பகுதிக்கு சென்று, அங்கு வேட்டையாட முயற்சி செய்த 5 பேரை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இராமனாதிச்சன்புதூா் பகுதியை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேருக்கும் தலா ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ.10, 000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இது போன்று இனி வரும் காலங்களில் வேட்டையாட செல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனா்.