முகப்பு
கன்னியாகுமரி

மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி. நன்றி

டவ் தே புயலின் போது கடலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

டவ் தே புயலின் போது கடலில் மாயமான மீனவா்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென் வங்கக் கடலில் அண்மையில் உருவான, டவ்தே புயல் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு சில மீனவா்கள் கரை திரும்பிய நிலையில் நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 21 மீனவா்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவா்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயலால் கடலில் காணாமல் போன 21 மீனவா்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டதற்கும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.