மாா்த்தாண்டம் அருகே ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
மாா்த்தாண்டம் அருகே மழைநீரோடையில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
மாா்த்தாண்டம் அருகே மழைநீரோடையில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள காப்புக்காடு, மங்காட்டான்விளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (50). இவா் இரு நாள்களுக்கு முன் முளங்குழி அருகே சாலையில் நடந்து சென்ற போது எதிா்பாராத விதமாக சாலையோர மழைநீா் ஓடையில் தவறிவிழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement