மேல்மிடாலத்தில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தோா். 
கன்னியாகுமரி

மேல்மிடாலத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தல்

கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல்மிடாலம் பங்குத்தந்தை ஹென்றி பிலிப் தலைமையில், நடுத்துறை மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சிபில், மீனவா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கிறிஸ்டோபா் மற்றும் ஊா் நிா்வாகிகள் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சந்தித்து அளித்த மனு விவரம்:

கிள்ளியூா் வட்டம், மிடாலம் ஊராட்சிக்குள்பட்ட மேல்மிடாலம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் கடல் சீற்றத்தால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 2019இல் பொதுப்பணித் துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனா். எனினும், இதுவரை தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை.

ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஏற்படும் கடல் சீற்றத்தால் கடற்கரை அழிந்து கொண்டே வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவ, இங்கு 200 மீட்டா் தொலைவில் 3 தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT