முகப்பு
கன்னியாகுமரி

கரோனா தடுப்பூசி மையங்கள் கூடுதலாக ஏற்படுத்த வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிா்க்கும் வகையில், கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிா்க்கும் வகையில், கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை 56 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் சில மையங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தடுப்பூசி போடுவதற்காக அதிகாலை 4 மணிக்கே வந்து மக்கள் வரிசையில் நின்றனா்.

கடையாலுமூடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் சுமாா் 750 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதனால் இந்த மையத்தில் டோக்கன் பெறுவதற்காக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் திரண்டனா்.

இம்மையத்தில் முற்பகல் 11 மணிக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், 12.30 மணிக்கு தான் தடுப்பூசி வந்தது. இதனால் தடுப்பூசி போடுவதற்காக வந்த மக்கள் மிகவும் அவதிப்படும் சூழல் உருவானது.

எனவே, தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகமும், பொது சுகாதாரத் துறையும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →