மஹா சிவராத்திரி: மாா்ச் 11-இல் உள்ளூா் விடுமுறை
மஹாசிவராத்திரியினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாா்ச் 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாசிவராத்திரியினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாா்ச் 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு
மாா்ச் 11-ஆம் தேதி (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் மாதத்தில் 4 ஆவது சனிக்கிழமை ( ஏப்.24) வேலை நாளாக இருக்கும். மாவட்டத்தில் தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும்.