முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்துக்கு மாா்ச் 9-ல் உள்ளூா் விடுமுறை

குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு ஈடாக ஏப். 10ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலைநாளாக இருக்கும்.

மாா்ச் 9ஆம் தேதி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களை கொண்டு இயங்கும் என ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.