கன்னியாகுமரி

கிள்ளியூா் பகுதியில் பறக்கும் படையால் ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

கிள்ளியூா் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.98 ஆயிரத்தை பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

கருங்கல்: கிள்ளியூா் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.98 ஆயிரத்தை பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும்படை வட்டாட்சியா் அணில்குமாா் மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்

கிள்ளியூா் சிவன்கோயில் அருகில் அவா்கள் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், முன்சிறை பகுதியை சோ்ந்த கெவின்(19) என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு கிள்ளியூா் தோ்தல் தனி வட்டாட்சியா் சுனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT