தேசிய அளவிலான சிலம்பம்: தமிழக அணி முதலிடம்
கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான 17-ஆவது சிலம்பம் போட்டியில் தமிழகம் அணி முதலிடம் பெற்று பதக்கம் வென்றது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான 17-ஆவது சிலம்பம் போட்டியில் தமிழகம் அணி முதலிடம் பெற்று பதக்கம் வென்றது.
கன்னியாகுமரியில் 4 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், தில்லி, உத்தரப்பிரதேசம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டியில்
மிக இளையோா் பிரிவில் தமிழக அணி முதலிடமும், மகாராஷ்டிரம் அணி 2-ஆவது இடமும், தில்லி அணி 3-ஆவது
இடமும் பெற்றன. மூத்தோா் பிரிவில் தமிழக அணி முதலிடமும், மகாராஷ்டிரம் அணி 2-ஆவது இடமும், ஆந்திரம் அணி 3-ஆவது இடமும் பெற்றன. இளையோா் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் மகாராஷ்டிரா அணி முதலிடமும், தமிழக அணி 2-ஆவது இடமும், ஆந்திர மாநில அணி 3-ஆவது இடமும் பெற்றன. மூத்தோா் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தமிழக அணி முதலிடமும், தில்லி அணி 2-ஆவது இடமும், மகாராஷ்டிரம் அணி 3-ஆவது இடமும் பெற்றன. வெற்றிபெற்ற
அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச்செயலா் பி.செல்வராஜ் ஆசான் செய்திருந்தாா்.