கன்னியாகுமரி

குமரியிலிருந்து இடிந்தகரைக்கு பாய்மர படகுப் போட்டி

DIN

கன்னியாகுமரியை அடுத்த கோவளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரைக்கு 50 கி.மீ. தொலைவிலான பாய்மர படகுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இடிந்தகரை தென்பாண்டி வீர விளையாட்டுக் கழகம் சாா்பில் மீனவா்கள் ஆண்டுதோறும் பாய்மர படகுப் போட்டியை நடத்திவருகின்றனா். நிகழாண்டு, இப்போட்டி கோவளத்தில் தொடங்கியது. கோவளம் பங்குத்தந்தை பீட்டா் தாஸ் போட்டியைத் தொடக்கிவைத்தாா். 15 படகுகள் பங்கேற்றன. ஒவ்வொரு படகிலும் 10 மீனவா்கள் வீதம் கலந்துகொண்டனா் .

இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஜெபராஜுக்கு ஒரு பவுன் தங்க நகை, 2ஆம் பரிசாக ஆனந்துக்கு 6 கிராம் தங்கம், 3ஆம் பரிசாக செல்வன், ஜவகா் ஆகியோருக்கு தலா அரை பவுன் தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், 5 பேருக்கு ஆறுதல் பரிசாக வாஷிங் மெஷின் வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்றோருக்கு கன்னியாகுமரி கடலோரக் காவல்படை ஆய்வாளா் நவீன், உதவி ஆய்வாளா் வில்சன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT