குமரியில் மேலும் 13 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனா தொற்றால் 17,297 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 13 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,310 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 7 போ் உள்பட 16,944 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் 105 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.