முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் விஜய்வசந்த், எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை கொல்லங்கோடு பகுதியில் வாக்கு சேகரித்தனா்.

Updated On : 23 மார்ச், 2021 at 1:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் விஜய்வசந்த், எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை கொல்லங்கோடு பகுதியில் வாக்கு சேகரித்தனா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த், கிள்ளியூா் பேரவைத் தொகுதி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் கொல்லங்கோடு அருகேயுள்ள ஊரம்பு பகுதியில் இருந்து திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டனா். முன்னதாக ராஜேஷ்குமாா் ஊரம்பு பகுதியிலுள்ள காய்கனி, மீன் சந்தையில் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

பின்னா், அங்கு இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அவா்கள் திறந்த வேனில்

Advertisement

இருந்தவாறு வாக்கு சேகரித்தனா். பிரசாரத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளா் சஞ்சய் தத் பேசுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனா். கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டாா்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் பால்ராஜ், முன்சிறை வட்டாரச் செயலா் கிறிஸ்டோபா், திமுக

முன்சிறை ஒன்றியச் செயலா் எல். மனோன்மணி, மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் செல்லசுவாமி, கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.