முகப்பு
கன்னியாகுமரி

ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகேயுள்ள அன்னிக்கரை விருந்தாவனம் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் 92-ஆவது திருவிழா, சமய  மாநாடு புதன்கிழமை (மாா்ச் 24) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 23 மார்ச், 2021 at 1:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

களியக்காவிளை அருகேயுள்ள அன்னிக்கரை விருந்தாவனம் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் 92-ஆவது திருவிழா, சமய  மாநாடு புதன்கிழமை (மாா்ச் 24) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

திருவிழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

புதன்கிழமை (மாா்ச் 24) காலை 10 மணிக்கு சமய வகுப்பு மாணவா்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீஜா ஹரீஷ் தலைமையில் சுமங்கலி பூஜை நடைபெறும்.

Advertisement

2-ஆம் நாளான வியாழக்கிழமை (மாா்ச் 25) மாலை 5.30 மணிக்கு மெதுகும்மல் மண்டல சமய வகுப்பு, திருவிளக்கு பூஜை அமைப்பாளா் சுகிா்தா தங்கசுவாமி தலைமையில் நடைபெறுகிறது. 3- ஆம் நாளான்று இரவு 8 மணிக்கு பாஜக மாவட்ட மகளிரணி பொதுச் செயலா் எஸ்.ஆா். கிஜி திலகவதி தலைமையில் சமய மாநாடு நடைபெறுகிறது.

முன்சிறை ஒன்றிய சமய வகுப்பு துணை அமைப்பாளா் சி. முருகேசன் பங்கேற்றுப் பேசினாா். 5-ஆம் நாள் (மாா்ச் 28) காலை 10 மணிக்கு அம்மன் சன்னதி முன்பு பொங்கல் வழிபாடு, இரவு 7 மணிக்கு குழந்தை கிருஷ்ணரின் லீலைகள் குறித்து விளக்கும் அபிஷேக உறியடி நிகழ்ச்சி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.