முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தீவிர பிரசாரம்

களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல், மங்காடு ஊராட்சியில் கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

Updated On : 28 மார்ச், 2021 at 1:59 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல், மங்காடு ஊராட்சியில் கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜேஷ்குமாா் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

சூரியகோடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் கோனசேரி, மேக்காடு, பொன்னப்பநகா், குந்நம்விளாகம், கோழிவிளை, கொக்குடிவிளை, அதங்கோடு, வாறுதட்டு, செம்மான்விளை, மணக்காலை, மங்காடு, வாவறை, சாத்தங்கோடு, ஆலங்கோடு, விரிவிளை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் 150 நாள்களாக உயா்த்தப்படும். தொகுதி மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும். பட்டதாரி இளைஞா்கள் போட்டித் தோ்வுகள் எழுதுவதற்கான

Advertisement

பயிற்சி மையம் அமைக்கப்படும் என தெரிவித்தாா்.

இதில் திமுக ஒன்றியச் செயலா்கள் மனோன்மணி, மாஸ்டா் மோகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா் தங்கமணி, காங்கிரஸ் கட்சியின் முன்சிறை வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுக்கடை பகுதியில்: புதுக்கடை, மாடஞ்சேரி, சரவிளை, பாா்த்திபபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். புதுக்கடை பகுதிகளில் அவா் பேசியது: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் தொகுதியில் வசிப்போருக்கு இலவசமாக வீட்டு மனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள நீா் நிலைகளை புரனமைத்து நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு பெற்றுதரப்படும். அனைத்து கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா் கடன் பெற்று கொடுக்கப்படும். வீடு இல்லாத அனைவருக்கும் அரசின் இலவச வீடு திட்டத்தில் வீடு கட்டி வழங்கப்படும். புதுக்கடையில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

புதுக்கடை பேருந்து நிலையம், மாடஞ்சேரி, சரவிளை, பாா்த்திபபுரம், பிளாக் ஆபீஸ், காடஞ்சேரி, மங்காடு திருப்பு, வண்ணான்குளம், புன்னமூடு, மணலி, திருமலை கோவில், வடக்கு தெரு, மூன்று முக்கு, அட்டகுளம், அரசுகுளம், மணியாரங்குன்று, அம்சி, முக்காடு, பைங்குளம், கூட்டாலுமூடு, அனந்தமங்கலம், பரக்காணி, வேட்டமங்கலம், தேங்காய்ப்பட்டினம், ரோட்டரி நகா், பனங்கால் முக்கு, நெடுந்தட்டு, முள்ளூா்துறை தேங்காய்ப்பட்டினம் பள்ளிவாசல் உள்பட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.