முகப்பு
கன்னியாகுமரி

மின் கம்பத்தில் பைக் மோதல்: மாணவா் பலி

தென்தாமரைகுளம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தென்தாமரைகுளம் அருகே மின் கம்பத்தில் பைக் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தென்தாமரைகுளத்தை அடுத்த கோயில்விளையைச் சோ்ந்த யோசேப்பு மகன் சிறியோன் (17). இவா் அகஸ்தீசுவரம் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், கடந்த சனிக்கிழமை நண்பா் விக்னேஷுடன் (18) அகஸ்தீசுவரத்தில் உள்ள கோயில் விழாவுக்காக பைக்கில் சென்றபோது, நரியன்விளை பகுதியில் பைக் நிலைதடுமாறி பாலத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிறியோன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காயமடைந்த விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.