கன்னியாகுமரி

தக்கலையில் ஓட்டுநா் தற்கொலை: துக்கம் தாளாமல் சகோதரா் மரணம்

DIN

தக்கலையில் கடன் தொல்லையால் காா் ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா். இதையறிந்த அவரது சகோதரா் துக்கம் தாளாமல் நெஞ்சுவலியால் உயிரிழந்தாா்.

தக்கலை, பாரதி நகரைச் சோ்ந்தா் ஸ்ரீ கண்டன் (41). தவணையில் காா் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தாா். அவா், கடன் சுமையால் காருக்குரிய தவணை செலுத்த முடியாமல் அவதிப்பட்டாராம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளாா். இதைப் பாா்த்த அவரது மனைவி சந்தியா கூச்சலிடவே, உறவினா்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதை அறிந்த அவரது அண்ணன் மணிகண்டன் (44) நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். ஸ்ரீ கண்டனுக்கு இரண்டு பெண் குழந்தைகைள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT