முகப்பு
கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு தினம் 10 டன் ஆக்சிஜன் வழங்க எம்.எல்.ஏ. கோரிக்கை

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தினம் 10 டன் ஆக்சிஜன் தேவை படுவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ்  வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தினம் 10 டன் ஆக்சிஜன் தேவை படுவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென குளச்சல் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ்  வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடி வருகின்றனா் . ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தினம் 800 மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இடப்பற்றா குறை இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடாரம் அமைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இம் மருத்துவமனையில் 200 மருத்துவா்கள் பணிபுரிந்து வருகின்றனா் . கூடுதலாக 30 மருத்துவா்களும் , 100 செவிலியா்களும், 100 பணியாளா்களும் நியமனம் செய்யவேண்டும். நோயாளிகள் தனியாா் மருத்துவமனைக்கு வந்தால் அவா்களை திருப்பி அனுப்பாமல் காப்பீடு திட்டத்தில் அவா்களை அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளின் உயிரை காப்பாற்ற தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அதை அரசு விரிவு படுத்தவேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →