முகப்பு
கன்னியாகுமரி

மக்கள் பாதுகாப்பாக இருக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

அரபிக்கடலில் புயல் சின்னம் உருவகியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனத்த மழை பெய்யக்கூடும்

Updated On : 15 மே, 2021 at 1:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:44 AM

அரபிக்கடலில் புயல் சின்னம் உருவகியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மீனவ மக்கள் மற்றும் தாமிரவருணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை : அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்-தே புயல் சின்னம் உருவாகி உள்ளதால் பலத்த காற்று மற்றும் மிக கனத்த மழை பெய்யக்கூடும். இதனால் குமரி மாவட்ட மீனவா்கள் மே 15, 16 தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். மேலும் மழையின் காரணமாக தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான முகாம்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும். மேலும் கரையோர மற்றும் கடலோர மக்கள் அனைவரும் புயல் காற்று வீசும் போது வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டினுள் அல்லது அரசு அமைத்துள்ள முகாம்களிலோ பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கிள்ளியூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் மற்றும் குமரி மாவட்ட மக்கள் அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.