குலசேகரபுரத்தில் கரோனா நிவாரணம் அளிப்பு
அகஸ்தீசுவரம் ஒன்றியம், குலசேகரபுரத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 26 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அகஸ்தீசுவரம் ஒன்றியம், குலசேகரபுரத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 26 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
குமரி மாவட்ட தேவசம் போா்டு முன்னாள் கண்காணிப்பாளா் ஓ.சி.பிள்ளை நினைவாக, அவரது பேத்தி காா்த்திகா சுசீந்திரன் ஏற்பாட்டின் பேரில், குலசேகரபுரம் நூலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஓ.சுடலையாண்டி பங்கேற்று ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி மற்றும் 18 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில், அகஸ்தீசுவரம் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, நூலக அலுவலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.