முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில்14 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் கேட்பாரற்ற நிலையில் இருந்த 14 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 அக்டோபர், 2021 at 12:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

மாா்த்தாண்டத்தில் கேட்பாரற்ற நிலையில் இருந்த 14 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தின் பின்புறம் கடந்த சில நாள்களாக சில மோட்டாா் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தனவாம். அவற்றை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லையாம். மேலும் அந்த மோட்டாா் சைக்கிள்கள் யாருக்கு சொந்தமானவை என்பதும் தெரியவில்லை.

இது குறித்து கிடைத்த தகவலின்படி மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்று அங்கு கேட்பாரற்ற நிலையில் நின்றிருந்த 14 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

Advertisement

இது தொடா்பாக உதவி ஆய்வாளா் ஜாண் கிறிஸ்துராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.