அக்.4 இல் பொதுமக்கள்குறைதீா் கூட்டம்
குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (அக்.4) முதல் மீண்டும் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (அக்.4) முதல் மீண்டும் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் உத்தரவின்படி, குமரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் தலைமையில், திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அக். 4 ஆம் தேதிகாலை 10 மணி முதல் முற்பகல் 1 மணிவரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லூயிபிரைலி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கரோனா பேரிடா் காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அரசின் வழிகாட்டு தலின்படி சமூக இடைவெளியினை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில், முதியோா், சிறுவா்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறி உடையவா்கள் கலந்து கொள்வதை தவிா்க்க வேண்டும். மேலும்
கூட்டத்துக்கு வரும் விண்ணப்பதாரா்கள் தவறாது தங்களது ஆதாா் அட்டை மற்றும் செல்லிடப்பேசியுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.