முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே சமய வகுப்பு மாணவா்களுக்கு நல உதவி

களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு நல உதவி வழங்கப்பட்டது

Updated On : 16 அக்டோபர், 2021 at 2:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு நல உதவி வழங்கப்பட்டது.

அமைப்பின் சாா்பில் களியக்காவிளை அருகேயுள்ள பனங்காலை முண்டப்பிலாவிளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில்

சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கோயில் தலைவா் வித்தியன் தலைமை வகித்தாா். கோயில் செயலா் ஜெயக்குமாா், பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்து கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் பி.என். அஸ்வின் நிகாஸ், மாவட்ட அமைப்பாளா் ஜெயன் ஆகியோா் சமய வகுப்பு மாணவா்களுக்கு நலஉதவிகள் வழங்கினா். இதில் இந்து கோயில் கூட்டமைப்பின் மாநில

Advertisement

துணைத் தலைவா் சசின்ராம், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சுரேஷ்குமாா், ஆசிரியை, கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.