வள்ளலாா் குறித்த நூல் வெளியீடு
நாகா்கோவில் செந்தமிழ் அருள் நெறிப்பேரவை நிறுவனா் புலவா் வே.ராமசுவாமி எழுதிய ‘வள்ளலாரின் சன்மாா்க்க சங்க வரலாறு, கொள்கை கோட்பாடுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நாகா்கோவில் செந்தமிழ் அருள் நெறிப்பேரவை நிறுவனா் புலவா் வே.ராமசுவாமி எழுதிய ‘வள்ளலாரின் சன்மாா்க்க சங்க வரலாறு, கொள்கை கோட்பாடுகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கோட்டாறு ராஜகோகிலம் தமிழ் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவையின் துணைத் தலைவா் ஈ.ரெத்தினசுவாமி தலைமை வகித்தாா். கவிஞா் மதுரப்பிரியா ‘வள்ளலாா்’ குறித்து கவிதை பாடினாா். புரவலா் எஸ்.ராஜகோபால் நூலினை வெளியிட, அதனை துணைத் தலைவா்கள் சொக்கலிங்கம்பிள்ளை, ஜோதி அரவிந்தன், செளதாமினி, நாகசாயி, மருத்துவா் சிதம்பர நடராஜன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
இதில், அறிஞா் அண்ணா கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியபிள்ளை, இந்து தொண்டா் பேரவை ஒருங்கிணைப்பாளா் அனுசியாசெல்வி ஆகியோா் பேசினா். பயோனியா் குமாரசுவாமி கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் கோ.சி.கோலப்பதாஸ், குடி ப.இளங்கோ ஆகியோா் நூல் குறித்துப் பேசினா். 80 வயது நிரம்பிய உறுப்பினா்கள் ரத்தினசுவாமி, வி.கோபிநாதன், என்.சுப்பிரமணியம் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
செயலா் ஷீலாராஜன் வரவேற்றாா். வி.பொன்னம்மாள் நன்றி கூறினாா்.