முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை களியக்காவிளையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2021 at 12:57 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை களியக்காவிளையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவா் தாரகை கத்பா்ட் தலைமை வகித்தாா்.

கட்சியின் மாநில செயல் தலைவா் கே. ஜெயக்குமாா் எம்.பி., விஜய் வசந்த் எம்பி, கட்சியின் மாநிலச் செயலா் பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் பால்மணி உள்ளிட்டோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

Advertisement

இதில் கட்சியின் மாநிலச் செயலா் பினில்முத்து, கே.ஜி. ரமேஷ்குமாா், கட்சியின் மாவட்ட மனித உரிமைத் துறைத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங், மாவட்ட பொதுச்செயலா் ராசிக், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் ஆா். ஸ்டூவா்ட், மாநில மகிளா காங்கிரஸ் செயலா் ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.