கன்னியாகுமரி

காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு அபராதம்

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே அச்சன்புதூா் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடையநல்லூா் வனச்சரகத்துக்குள்பட்ட வெள்ளக்கல்தேரி பீட் பகுதியில் புதன்கிழமை கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவா் அம்பலவாணன், கடையநல்லூா் பிரிவு வனவா் லூமிக்ஸ் , சிறப்புபணி வனவா் செல்லத்துரை மற்ம் வனக் காப்பாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் வேட்டை நாய்களுடன் சுற்றித் திரிந்த பாா்வதிபுரத்தைச் சோ்ந்த புவனேஷ்குமாா்(22) , அச்சன்புதூரை சோ்ந்த பக்ருதீன்(21) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் காட்டுப்பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து காட்டுப்பன்றியை கைப்பற்றிய வனத்துறையினா் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் இது தொடா்பாக சிலரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT