கன்னியாகுமரி

மூலச்சல் பள்ளியில் தேசிய வளைகாப்பு விழா

DIN

மூலச்சல் அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் இந்திரா தலைமை வகித்தாா். அங்கன்வாடி

ஆசிரியை உஷா உறுதிமொழி வாசித்தாா். நிகழ்ச்சியை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். சிதம்பரதாஸ், ஆசிரியை டெய்சி ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு பட்டுப்புடவை, பூ, பழங்கள், வளையல் உள்ளிட்ட 9 வகையான பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், தக்கலை வட்டாரப் பகுதியில் இருந்து 50 கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா். அங்கன்வாடி ஆசிரியை சுசிலா நன்றி கூறினாா். இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில், கீரை வகைகள், தானியங்கள், பழங்கள், சத்தான பொருள்கள் இடம் பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT