மேல்மிடாலத்தில் ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடப் பணி தொடக்கம்
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலத்தில் ரூ. 11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலத்தில் ரூ. 11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும், இக்கட்டட பணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா் டென்னிஸ் முன்னிலை வகித்தாா்.
இதில், ஜஸ்டின், மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ஜோபி, ஒன்றிய கவுன்சிலா் விஜயராணி உள்பட பலா் பங்கேற்றனா்.