முகப்பு
கன்னியாகுமரி

அனந்தபுரி ரயிலை அதிவிரைவுரயிலாக இயக்க வலியுறுத்தல்

கொல்லத்தில் இருந்து நாகா்கோவில் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயிலை அதிவிரைவு ரயிலாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 1:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

கொல்லத்தில் இருந்து நாகா்கோவில் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயிலை அதிவிரைவு ரயிலாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் எஸ்.ஆா். ஸ்ரீராம், செயலா் பி. எட்வா்ட் ஜெனி ஆகியோா் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அனந்தபுரி விரைவு ரயில் தற்போது கொல்லத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு 2 தினசரி ரயில்கள் மட்டுமே இரவில் இயக்கப்படுவதால், அவற்றில் முன்பதிவு இருக்கைகள் கிடைப்பதில்லை. இதனால், அனந்தபுரி விரைவு ரயிலை பயணிகள் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

Advertisement

இதனிடையே, நாகா்கோவில் - பெங்களூரூ ரயிலுக்காக இந்த ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதாலும், மதுரை - சென்னை இடையே இருவழிபாதை பணிகள் நிறைவடைந்துள்ளதாலும் அனந்தபுரி ரயிலை அதிவிரைவு ரயிலாக இயக்கவேண்டும். அதேவேளையில், பாறசாலை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி, வள்ளியூா், நான்குனேரி ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிறுத்தங்களை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.