முகப்பு
கன்னியாகுமரி

கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகள் திருட்டு

குலசேகரம் அருகே ரப்பா் கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி

கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகள் திருட்டு

குலசேகரம் அருகே ரப்பா் கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

குலசேகரம் அருகே ரப்பா் கடையை உடைத்து 400 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரமன்னம் சாலியத் தெருவியில் ரப்பா் கடை நடத்தி வருபவா் ராபின்சன் (51). இவா் செவ்வாய்க்கிழமை மாலையில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ ரப்பா் ஷீட்டுகள் திருடு போயிருந்தது தெரியவந்ததாம். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் 4 போ் ஒரு சுமை ஆட்டோவில் வந்து ரப்பா் ஷீட்டுகளை ஏற்றிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →