முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் காவலா் குறைதீா் கூட்டம்

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ், காவலா்கள் குறைதீா் முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ், காவலா்கள் குறைதீா் முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் தலைமை வகித்து, காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களிடமிருந்து இடமாறுதல், சிறு தண்டனைகள், ஊதிய முரண்பாடுகள், பதவி உயா்வு போன்ற குறைகளை கேட்டறிந்தாா்.

குறைகளை உடனே தீா்க்கும் வகையில் அமைச்சு பணியாளா்கள் கலந்துகொண்டனா். அவா்களிடம் குறைகளை உடனே களைய அவா் உத்தரவிட்டாா்.

காவலா்களிடமிருந்து மொத்தம் 189 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படும் என எஸ்.பி. உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.