முகப்பு
கன்னியாகுமரி

காற்றாலை மின் உற்பத்தியை நவீனமயமாக்க நடவடிக்கை: அமைச்சா் மனோ தங்கராஜ்

குமரி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தியை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தியை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் த.மனோ தங்கராஜ்.

ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் பகுதியில் உள்ள காற்றாலை பகுதிகளை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: குமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான காற்றாலைகளின் தரத்தை உயா்த்துவதற்கும், புதிய காற்றாலைகளை நிறுவுவது குறித்தும் தகுதியான வல்லுநா்கள் குழுவினரை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழக மின் வாரியத்திற்கு வழங்குவது குறித்து நன்கு ஆராய்ந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, காற்றாலை மின் உற்பத்தியை நவீன யுக்தியுடன் பெருக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வரும் காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்வதற்காக காற்றாலை உற்பத்திக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, ஜோதிநாத், மணிகண்டன், ஆலோசகா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாா்டின்ஸ்டெஸ்லா், தோவாளை ஊராட்சித் தலைவா் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், தாணு, முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.