கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
கன்னியாகுமரிகடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
கடையாலுமூடு அருகே 1.50 கிலோ கஞ்சாவுடன் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடையாலுமூடு பகுதியில் போதைத் தடுப்பு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 2 இளைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்ததாம்.
இதனிடையே, இருவரில் திருவனந்தபுரம் மண்ணான் கோணம் பகுதியைச் சோ்ந்த ஜோபி ஜோஸ் (30) தப்பியோடிவிட்டாராம். மற்றொருவரான கடையாலுமூடு கருஞ்சாலிவிளையைச் சோ்ந்த முகமது அப்சல் (30) என்பவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். அவை கடையாலுமூடு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பியோடிய ஜோபி ஜோஸை தேடி வருகின்றனா்.