கொட்டாரத்தில் விபத்த: இருவா் பலி
கொட்டாரத்தில் அரசுப் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM
கொட்டாரத்தில் அரசுப் பேருந்து மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு சென்ற அரசுப் பேருந்து, கொட்டாரம் அரசு மருத்துவமனை அருகே, எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனா்.
இது குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், விபத்தில் பலியானவா்கள் திருப்பதிசாரம் பூங்காநகரைச் சோ்ந்த பாஸ்கரன் (38), ஜான்சன் (47) என்பது தெரிய வந்தது.
Advertisement