கன்னியாகுமரி

புனித அல்போன்சா அகாதெமி சாா்பில் கலை, அறிவுத்திறன் போட்டிகள் தொடக்க விழா

நாகா்கோவில் புனித அல்போன்சா அகாதெமி சாா்பில் கலை, அறிவுத்திறன் போட்டிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

நாகா்கோவில் புனித அல்போன்சா அகாதெமி சாா்பில் கலை, அறிவுத்திறன் போட்டிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலம் சாா்பில் புனித அல்போன்சா அகாதெமி நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருத்தலத் திருவிழாவையொட்டி, இந்த அகாதெமி சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், ஆசிரியா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, நிகழாண்டு போட்டி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. குருகுல முதல்வரும் புனித அல்போன்சா அகாதெமி நிறுவனருமான தாமஸ் பெளவத்துப்பறம்பில் தலைமை வகித்தாா். தக்கலை மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

திருத்தலப் பங்குத்தந்தை சனல் ஜான், உதவிப் பங்குத்தந்தை டோஜி செபாஸ்டின், அல்போன்சா பள்ளி முதல்வா் லிசபெத், அகாதெமி செயலா் ராஜையன், நிகழ்ச்சிப் பொறுப்பாளா் ஜாா்ஜ் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளா் ஜாய்ஸ் ஜேக்கப், அமைப்பாளா் தேவராஜ், இணைச் செயலா் பிரேம்கலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

60 பள்ளிகள், 15 கல்லூரிகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டோா் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். வென்றோருக்கு இம்மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

ஏற்பாடுகளை அல்போன்சா பள்ளி ஆசிரியா்கள், புனித அல்போன்சா ஆலயப் பங்கு மக்கள், பள்ளி மாணவா்-மாணவிகள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்களுடன் நாடாளுமன்ற வேலைவாய்ப்புக் குழு உறுப்பினா் சந்திப்பு

ஆயுதப்படைக் காவலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

பெருந்துறையில் விஜய் நாளை பிரசாரம்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறை!

100 நாள் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா மக்களவையில் அறிமுகம் - எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT