சுசீந்திரம் கோயிலில் புதிய சண்டிகேஸ்வரா் சிலை பிரதிஷ்டை
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் புதிய சண்டிகேஸ்வரா் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் புதிய சண்டிகேஸ்வரா் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இக்கோயிலில் மூலவா் சந்நிதி அருகேயுள்ள சண்டிகேஸ்வரா் சிலை சேதமடைந்ததால், மாா்த்தாண்டத்தில் புதிதாக சண்டிகேஸ்வரா் சிலை வடிவமைக்கப்பட்டு கடந்த ஜன. 22இல் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, கலச அறையில் நெல் மணிகளுக்குள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாத்தூா் மடம் தந்தரி சஜித் சங்கர நாராயணகுரு தலைமையில் புதன்கிழமை பூஜைகள் நடைபெற்று
பிற்பகலில் பழைய சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா் தலைமையில், கண்காணிப்பாளா் சிவகுமாா், மேலாளா் ஆறுமுகதரன், கோயில் பணியாளா்கள், கணக்கா் கண்ணன் செய்திருந்தனா்.